குருவின் திருவடி சரணம்

குருவே குருவே திருவடி சரணம்

உறவின் உறவே மலரடி சரணம்

ஒளியின் ஒலியே சரணம் சரணம்

மலரின் மலரே சரணம்

 

பணிவுடன் போற்றி சரணம் சரணம்

பணியாய் ஆற்றி சரணம் சரணம்

எளிதாய் தோற்றி சரணம் சரணம்

குருவே உன்னிடம் முழுவதும் சரணம்

 

பாதம் இரண்டும் மனதில் வைத்து

எதையும் தாங்கும் வரத்தை தந்தாய்

உன் போல் எவரும் உலகில் உண்டோ?

சரணம் சரணம் சரணம்

 

இம்முறை என்னுல் தோன்றிடும் சரணம்

எம்முறை என்னை ஆற்றிடும் சரணம்

சரணம் சரணம் பொற்பாதம் சரணம்

குருவின் பாதம் பணிவுடன் சரணம்

Leave a Reply

Comments are closed on this archived site.